நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்…தேடுதல் பணி தீவிரம்.!

Helicopter missing in Nepal

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போயுள்ளது.

9NMV என்ற அழைப்புக் குறியுடன் கூடிய ஹெலிகாப்டர், காலை 10:15 மணியளவில் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்துள்ளது.

Civil Aviation Authority of Nepal
Civil Aviation Authority of Nepal [Image-CAAN]

சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து புறப்பட்ட மனங் ஏர் ஹெலிகாப்டர் 15 நிமிடங்களில் தொடர்பு இல்லாமல் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது, கேப்டன் சேட் குருங்கால் இயக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

குறிப்பு: மேலும் இந்த செய்தி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு காத்திருங்கள். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்