பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, நகரில் 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வடக்கு சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள இரண்டு நகரங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மழைவெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும் பெர்டியோகா நகரங்க;ல் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் உள்ளன, மேலும் மீட்புக்குழுக்கள் இங்கு தொடர்ந்து தேடி வருகின்றனர். நிலச்சரிவுகளால் 50 வீடுகள் இடிந்துள்ளதாகவும், இதில் காணாமல் போன மக்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் சாவோ செபஸ்டியாவோ நகர மேயர் ஃபெலிப் அகஸ்டோ தெரிவித்தார்.
ஒரே நாளில் இங்கு 600 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது குறுகிய கால அதிக மழைப்பொழிவாகும், மேலும் இந்த வெள்ளத்தில் நிறைய வீடுகளின் மேற்கூரை மட்டும் தெரியும்படி நீரில் மூழ்கியுள்ளன. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து பார்வையிடுவதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…