படித்த போதே துன்புறுத்தப்பட்டார்! டிரம்ப்பை சுட்டவரை பற்றி நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் பள்ளிக்கூடம் படித்த போது தொடர்ந்து துன்புறுத்தப்பட்டவர் என்றும், வீடியோ கேம்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்றும் அவரது முன்னாள் வகுப்பு தோழர் ஒருவர் கூறியுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த டொனால்ட் டிரம்ப் மீது நேற்று ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தினார். இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் குறுக்ஸ் குறித்து அவர் பள்ளியில் படித்ததாக கூறிய முன்னாள் வகுப்பு தோழர் ஜேசன் கோலர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 20 வயதான குறுக்ஸ், “வேட்டையாடும்” உடைகள் மற்றும் வீடியோ விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். அவர் அடிக்கடி தனிமையாகவும், “சமூக ரீதியாக தடுத்து நிறுத்தப்பட்ட” மாணவராகவும் இருந்தவர்” என கூறினார்.
