உலகிலேயே நீளமான ‘மீசை’ இவருக்கு தான்..”கின்னஸ் சாதனை” படைத்த நபர்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
உலகில் உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற சாதனையை அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்த பால் ஸ்லோசர் என்பவர் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வசிப்பவர் பால் ஸ்லோசர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி, காஸ்பரில் நடைபெற்ற அமெரிக்க தேசிய தாடி மற்றும் மீசை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இதில், பாலின் மீசை அளக்கப்பட்டது. அவரது மீசையின் நீளம் 63.5 செ.மீ. இருந்துள்ளது.
கடந்த 3 தசாப்தங்களாக, அவர் தனது மீசையை வளர்த்து வந்துள்ளார். இறுதியில் அவரது கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்தது. அவரது மீசையின் அகலம் 2 அடி 1 அங்குலம் (63.5 செ.மீ.) சொல்லப்போனால், இந்த மீசையின் நீளம் கிட்டத்தட்ட 4 மாத குழந்தையின் நீளத்திற்கு சமமாகிவிட்டது என்றே கூறலாம்.
மேலும், இவருக்கு முன்னதாக இவரை விட பெரிய மீசை வைத்து சாதனை படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், உலகில் உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற பெருமையை பால் ஸ்லோசர் பெற்றுள்ளார். உலகில் தற்போது வேறு எந்த நபருக்கும் இவ்வளவு நீளமான மீசை இல்லை.
இதனால் அவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் இவ்வளவு பெரிய மீசையா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.