ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: 100 பேர் உயிரிழப்பு.. 900 பேர் காயம்..!

#Attack

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்தநிலையில்,  இன்று காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 5000 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

இதுவரை நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த திடீர் தாக்குதல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்ரேல் போர்க்கால நிலையை அறிவித்துள்ளது.  இந்த ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  இந்த ஆண்டு இதுவரை ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலிருந்தும்  270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்  247 பாலஸ்தீனியர்கள், 32 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi