இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நிறுத்தினால் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தயார்.! ஈரான் தகவல்.! 

Isael - Hamas War

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் தலைமையிடமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் என தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என  உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐநாவில் உறுப்பு நாடுகள் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. இருந்தும் இந்த தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

ஏற்கனவே, இஸ்ரேலை சேர்ந்த 199 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. மேலும், அந்த பணயக்கைதிகளில் வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டினரும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகள் பற்றி ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நாசர் கனானி கூறுகையில், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட பொதுமக்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அந்த அமைப்பு தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் கூறுவது என்னவென்றால், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கூறியதாக ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் கூறுகையில், தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என ஹமாஸ் கூறியதாகவும் அவர் கூறினார்.

இந்த போர் சமயத்தில் அமெரிக்கர்கள் காசாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது, மேலும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதையும் அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கர்களைக அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்