இது போல் நடந்தால் பிணைக் கைதிகளை கொன்று விடுவோம்…இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்த ஹமாஸ்!

Hamas Hostages

கடந்த 7ம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெறும் உச்சக்கட்ட போரில், கடந்த மூன்றே நாட்களில் இரு தரப்பிலிருந்தும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் எச்சரிக்கை கொடுக்காமல், குண்டுகளை வீசினால் நாங்கள் வசப்படுத்தி வைத்திருக்கும் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

காசா பகுதிகளை கைவசப்படுத்த முயற்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்களின் வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டும், வீடியோக்களும் தெருக்களில் கண்மூடித்தனமாக தாக்கி இழுத்து சென்று வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களையும் ராணுவ வீரர்களையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக சிறைபுடித்து வைத்துள்ளனர். நேற்று ஹமாஸ் இருக்கும் இடங்களில் இஸ்ரேல் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்திய நிலையில், எச்சரிக்கை கொடுக்காமல், தாக்குதல் நடத்தினால் பிணைக் கைதிகளை கொன்று விடுவோம் என்று ஹமாஸ் குழு வார்னிங் கொடுத்துள்ளது.

இதற்கிடையில், நேற்று பிற நாடுகளின் ராணுவ உதவிகள் எங்களுக்கு தேவையில்லை என்றும், இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் என்றும் இஸ்ரேல் தூதர் அறிவித்தார். இதனை தொடர்ந்து, காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்து இருந்த நிலையில், தற்போது காசாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்