Categories: உலகம்

2 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்.!

Published by
மணிகண்டன்

பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு,  பதில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் 15 நாட்களுக்கும் மேலாக தற்போது வரை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் தலைமையிடமாக கருதப்படும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் தான் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.

வான்வெளி , தரைவழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் வசம் இஸ்ரேல் மற்றும் ஒரு சில வெளிநாட்டவர் என பலர் பிணைய கைதிகளாக உள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியிலும் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்! 70 பேர் உயிரிழப்பு?

இந்நிலையில், இரண்டு பெண் பிணைய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். வயது மூப்பு, மருத்துவ தேவைகளுக்காக அவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது காசா எல்லை பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள்ளனர்.

இது தொடர்பாக ஹமாஸ் தரப்பில் பதிவிடுகையில், 2 பெண்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் இராணுவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். இரண்டு அமெரிக்கப் பெண்களான ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் காசா மற்றும் எகிப்து இடையேயான ரஃபா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

3 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

4 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

5 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

5 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

6 hours ago