இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் தாக்குதல்!

hamas terrorist

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகள் மீது 150 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையும் இஸ்ரேல் மீது மீண்டும்  தாக்குதல் நடத்தி வருகிறது.

தெற்கு இஸ்ரேல் பகுதியில் மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய சங்கு ஒலிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதுபோன்றும், இஸ்ரேலிய விமானப்படை காசா பகுதியில் வசிப்பவர்களை தெற்கே வெளியேறுமாறு வலியுறுத்தி, ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் ஆட்சியை அழித்து, அதன் ராணுவத் திறனையும் அழித்துவிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை  இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலிய நகருக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்பின் ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் அதன் தாக்குதலை தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதில் குறிப்பாக இஸ்ரேல் படை வான்வழி மற்றும் தரைவழி என பல்வேறு கோணங்களில் காசா மீது குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருக்கும் பதுங்கு குழு , அவர்களது சுரங்கபாதைகள் உள்ளிட்டவை மீதும் ஹமாஸ் அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதுவும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போன்று ஹமாஸ் இயக்கம் ஒடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் கூறியிருந்தார். அதனால் ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சமயத்தில், பாலஸ்தீனியர்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் வெஸ்ட் பேங்க்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வருவதாக கூறப்படுகிறது.

அதே சூழலில், இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகள் மீது 150 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் ஹமாஸ் அமைப்பு நடத்தியுள்ளது.  எனவே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து வந்தாலும், தற்போது தீவிரமடைந்துள்ளது.  இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்