ஹஜ் பயணம் – கொரோனா கால கட்டுப்பாடுகளை நீக்கிய சவூதி அரசு..!
ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்த நிலையில், கொரோனா கால கட்டுப்பாடுகளை நீக்கிய சவூதி அரேபியா அரசு.
ஹச் பயணத்துக்கு கொரோனா காலங்களில் சவுதி அரேபியா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகளை நீக்கி சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹச் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் தவுபீக் அல் ரபியா தெரிவித்துள்ளார்.