#Hackers:இந்தியாவுக்கு எதிராக சைபர் போருக்கு அழைப்பு விடுத்த ஹேக்கர் குழுக்கள்

Default Image

நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக மலேசியா, இந்தோனேசிய ஹேக்கர்கள் இந்தியாவை நோக்கி இணைய வழி போரைத் தொடங்கியுள்ளனர்.

ட்ராகோன்போர்ஸ் மலேஷியா மற்றும் ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா என்ற இரு குழுக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மே 27 அன்று ஒரு தேசிய தொலைக்காட்சியில் ஞானவாபி மசூதி விவகாரம் குறித்த பிரைம் டைம் விவாதத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா நபிகள்  குறித்து சர்ச்சையாகப் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்த சர்ச்சைக்குரிய கருத்துக் காரணமாக உலகம் முழுவதும் அவருக்கு  பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.மேலும் பாஜகவில் இருந்தது நூபுர் ஷர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதை கண்டிக்கும் வகையில் தற்போது மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு ஹேக்கர் குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக இணையப் போரைத் தொடங்கியுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அகமதாபாத் சைபர் கிரைம் டிசிபி அமித் வாசவா கூறுகையில்,”நூபுர் ஷர்மாவின் தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பரப்பியுள்ளது” என்று கூறினார்.

மேலும் ஆந்திரப் பிரதேச காவல்துறை, அரசு அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் பிறரின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை இந்த ஹேக்கர் குழுக்கள் ஹேக் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.மற்றும் தானே காவல்துறையின் இணையதளமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.2,000க்கும் மேலான இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் வாசவா கூறினார்.

ஹேக் செய்யப்பட்ட இணையதளங்களில் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்’ என்று ஹக்கர்கள் ஆடியோ மற்றும் செய்தி வடிவில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அகமதாபாத் சைபர் கிரைம், மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் லுக்அவுட் அறிவிப்புக்காக இன்டர்போலுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்