கின்னஸ் உலக சாதனை! ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பின.!
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த மாலியைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பினர்.
கடந்த வருடம் மே 2021 இல் மாலியைச்சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்று 27 வயதான இளம்பெண் மொரோக்கோவின் காசப்ளாங்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மாலி அரசாங்கம், பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஹலிமா சிஸ்ஸே-வை மொரோக்கோவின் எய்ன் போர்ஜா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.
5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் என ஒவ்வொன்றும் 500கிராம்- 1 கிலோ எடை வரை பிறக்கும் போது இருந்தது. இதனால் குழந்தைகள் நலம் பாதிக்காமலிருக்க மருத்துவமனையின் இன்குபேட்டரில் இருக்கவேண்டிய நிலையில் இருந்தது.
கடந்த 2009இல் அமெரிக்காவைச்சேர்ந்த நதியா சுலேமான்(33) ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார், தற்போது ஹலிமா சிஸ்ஸே(27) ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மொரோக்கோவிலிருந்து பாதுகாப்பாகவும், நலமுடனும் தாயும் குழந்தைகளும் மாலிக்கு திரும்பியுள்ளனர் என்று மொரோக்கோ சுகாதார அமைச்சர் டிமினாடோ சங்கரே தெரிவித்தார். தனக்கு முறையில் பிரசவம் பார்த்து உதவிய மொராக்கோ மருத்துவக் குழுவிற்கு, ஹலிமா சிஸ்ஸே தனது நன்றியைத் தெரிவித்தார்.