பெரும் சோகம்…கனமழை காரணமாக 13 பேர் பலி, 10,000 பேர் வெளியேற்றம்.!!

Italy floods

இத்தாலியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

இத்தாலியில் கனமழை

இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  280க்கும் மேற்பட்ட இடங்கள் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு 13000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் சிலர் ஹெலிகாப்டர் மூலம் கூரையிலிருந்து மீட்கப்பட்டனர்.

இந்த கனமழையில் 14 ஆறுகள் கரை உடைந்து 23 நகரங்களை வெள்ளத்தால் மூழ்கியது. மேலும், இந்த வார இறுதியில் எமிலியா-ரோமக்னா F1 கிராண்ட் பிரிக்ஸ் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணம்..? 

மினெர்வா புயலால் ஏற்பட்ட தாக்கத்தால் வடக்கு இத்தாலி கடுமையான வறட்சியிலிருந்து வெள்ளப்பெருக்கு மழைக்கு சென்றுள்ளது என்று பிபிசி வானிலை தொகுப்பாளர் கிறிஸ் ஃபாக்ஸ் கூறினார். இது குறித்து பேசிய அவர் “மாதத்தின் தொடக்கத்தில் பெய்த மழையால் இந்த பகுதி வெள்ளத்திற்கு வழிவகுத்தது.

கடந்த ஆண்டு கடுமையான வறட்சி காரணமாக இத்தாலிய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலைக்கு இந்த கனமழை முற்றிலும் மாறுபட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் இத்தாலியில் மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மக்கள் கவனமாக இருக்கவேண்டும்.” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்