வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.! 6 பேர் பலி.! பல்கலைக்கழகங்கள் மூடல்.!

வங்கதேசம்: 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இம்மாதம் தொடக்க முதலே மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கியதால் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைத்தது. இருந்தும் அரசு முழுதாக இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டங்கள் தொடரும் என மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து போராட்டகாரர்கள் கூறுகையில், வங்காளதேசத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலைகளை மட்டுமே நம்பிக்கை வைத்து படித்து வருகின்றனர், இப்படியான சூழலில் இந்த ஒதுக்கீட்டு முறை தகுதியானவர்களுக்கான வாய்ப்புகளை தட்டி பறிக்கும் சூழலை உருவாக்குகிறது என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது வரையில், போராட்ட களத்தில் 6 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன
இந்த உயிரிழப்பு சம்பவங்களை அடுத்து, வங்கதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட சொல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாணவர்கள் விடுதியில் தங்க வேண்டாம் என்றும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025