தாய்லந்தில் இருந்து தாயகம் திரும்பினார் கோத்தபய ராஜபக்ச…!
தாய்லந்தில் இருந்து மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபாய ராஜபக்ஷே.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 9 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் தலைநகரில் உள்ள பல அரச கட்டிடங்களை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து, அவர் உடனடியாக பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை எடுத்து, கோத்தபய ராஜபக்ஷே அவர்கள் கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து, ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து ஜூலை 14 அன்று ராஜினாமா கடிதம் அனுப்பினார்.
அதனை தொடர்ந்து, சிங்கப்பூரில், அங்கிருந்து வெளியேறி தாய்லாந்து நாட்டில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தார். பின் மீண்டும் தாயகம் திரும்ப முடிவு செய்த நிலையில், நேற்று இரவு அவர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வந்து இறங்கி உள்ளார்.
கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதால் அவருக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதையடுத்து, கொழும்பின் முக்கிய பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.