விளம்பரங்கள் மூலம் கூகுளின் வருவாய் இவ்வளவு கோடியா? கடந்த ஆண்டை விட 79% அதிக வருவாய்.!

Default Image

கூகுள் இந்தியா நிறுவனம் 2022 நிதியாண்டில், இந்தியாவில் அதன் விளம்பர விற்பனையில் 79.4% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் அதன் தளத்தில் கூகுள் விளம்பரங்கள் மற்றும் பிற தளங்கள் போன்ற நிரல்களின் மூலம் பயனர்கள் ஆன்லைன் விளம்பரங்களை இயக்க அனுமதிக்கிறது.

கூகுள் விளம்பரத்திட்டங்கள், ஆன்லைன் விளம்பரங்களை உருவாக்க உதவுகின்றன, அவை வணிகத்தை மேம்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கவும், உங்கள் இணையதளத்திற்கான பார்வையாளர்களை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2022 நிதியாண்டில், கூகுள் இந்தியா விளம்பர விற்பனையில் முந்தைய ஆண்டை விட 79.4% அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. கூகுளின் சமீபத்திய ஒழுங்குமுறை தாக்கல் படி, விளம்பரம் மூலம் ₹ 24,926.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கூகுள் நிறுவனம் விளம்பரங்களை வாங்குவதற்காக கூகுள் சிங்கப்பூர் பி.டி.இ க்கு 22,485 கோடியை செலுத்தியது மேலும் சமன்படுத்தும் வரியாக 1,370.7 கோடியை உள்ளூர் வரி அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறது என்று அறிக்கை மேலும் கூறியது.

2021-22 நிதியாண்டில், கூகுள் இந்தியா ₹ 9,286 கோடி,செயல்பாடுகள் மூலம் நிகர வருவாய் பெற்றுள்ளதாகவும் மற்றும் அதில் நிகர லாபமாக ₹ 1,238.9 கோடியையும் பெற்றுள்ளது.

விளம்பரம் மூலம் நிகர விற்பனை ₹ 2,080.9 கோடியாக இருந்த நிலையில், கூகுள் டாக்ஸ் மற்றும் ஜிமெயில் போன்ற நிறுவன தயாரிப்புகளின் விற்பனை ₹ 88.8 கோடியை ஈட்டியுள்ளது என அறிக்கை கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்