முறைகேட்டில் ஈடுபட்ட கூகுள்.! 3,200 கோடி அபராதம் விதித்த அமெரிக்க அரசு.!
பயனர்களின் இருப்பிடத்தை கண்காணித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு $392 மில்லியன் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களது இருப்பிடத்தின் அனுமதியை அணைத்து வைத்த போதிலும் கூகுள் தொடர்ந்து பயனர்களின் இருப்பிடத்தைக் கண்காணித்ததாக அமெரிக்காவின் பல மாகாணங்களில் தொடரப்பட்ட வழக்கில், கூகுள் நிறுவனமானது அந்தந்த மாகாணங்களுக்கு $392 மில்லியன்(இந்திய மதிப்பில் ஏறத்தாழ 3,200கோடி) செலுத்த உள்ளது.
இந்த மாகாணங்களின் வழக்கறிஞர்கள், அசோசியேட்டட் பிரஸ்ஸின் 2018 அறிக்கையை அடுத்து எழுந்த விசாரணையில் இது உறுதியானது. இருப்பிட வரலாற்று அம்சம் நிறுத்திவைக்கப்பட்டபோதும் கூகுள், பயனர்களின் இருப்பிடத் தரவைக் கண்காணித்துள்ளது, மேலும் இந்த இருப்பிடத்தகவலை விளம்பரதாரர்களுக்கு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனியுரிமை தொடர்பான இந்த வழக்கில் அமெரிக்க வரலாற்றில் இது மிகப்பெரிய தீர்வு ஆகும்.