2021-ன் கடைசி நாளை தனது முக பக்கத்தில் கோலாகலமாக கொண்டாடும் கூகுள்.!
2021-ன் கடைசி நாளான இன்று புத்தாண்டு ஈவ் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனமானது தனது டூடுலை வடிவமைத்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது சர்ச் என்ஜின் முதல் பக்கத்தில் கூகுள் என எழுதி இருக்கும் வடிவத்தை ஒவ்வொரு முக்கிய தினத்திற்கும் ஏற்றவாறு வடிவமைத்து இருக்கும். உதாரணமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகளிர் தினம் என பெரும்பாலான தினங்களுக்கு கூகுள் தனது டூடுலை மாற்றிவிடும்.
அதே போல, 2021 வருட இறுதியான இன்று கூகுள் தனது டூடுலை மாற்றியுள்ளது. அதனை கிளிக் செய்யததும் பார்ட்டி பேப்பர் மேலிருந்து விழுவது போலவும், அதில் ஒரு இசை வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
நியூ இயர் ஈவ் (New Year Eve ) எனும் வாக்கியத்திற்கு அருகில் பார்ட்டி பேப்பர் குடுவை போல ஒரு க்ளிக் பொத்தான் இருக்கிறது அதனை க்ளிக் செய்ததும் ஒரு பாப் சத்தமும் அதிலிருந்து பார்ட்டி பேப்பரும் அந்த பக்கத்தை அலங்கரித்து செல்கின்றன.
கூகுள் டூடுல் எழுத்து வடிவமானது அலங்கரிக்கப்பட்ட Google எழுத்துக்கு நடுவே 2021 என சாக்லேட் வடிவத்தில் அச்சிடப்பட்டு அது சிறிய ஜிஃப் வீடியோ போல அமைக்கப்பட்டுள்ளது. இன்றே 2021-ன் கடைசி நாள் என்பதால் இந்த வடிவமைப்பு 2021-ஐ வைத்து வடிவமைக்கப்ட்டுள்ளது.