கூகுள் பணிநீக்கம்..! தலைமையகத்தில் போராட்டம் நடத்திய ஊழியர்கள்..!
நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கூகுள் ஊழியர்கள் பணிநீக்கங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
உலகின் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், கடந்த சில மாதங்களாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கூகுள் 12,000 பணியாளர்களை அல்லது அதன் ஒட்டுமொத்த பணியாளர்களில் 6% பேரை பணிநீக்கம் செய்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் பல தொழிலாளர்கள் இந்த வாரம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சக ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர்.
இதில் ஒரு போராட்டம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ள கூகுள் தலைமையகத்திலும், மற்றொரு போராட்டம் நியூயார்க் நகரத்தில் உள்ள கூகுளின் அலுவலகங்களுக்கு அருகிலும் நடைபெற்றது. இதில் சுமார் 50 ஊழியர்கள் சுமார் 50 ஊழியர்கள் நியூயார்க்கில் உள்ள கூகுள் ஸ்டோருக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த இரண்டு போராட்டங்களும் தொழிலாளர் குழுவான ஆல்பபெட் தொழிலாளர் சங்கத்தால் (Alphabet Workers Union) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது 1,200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் முழுநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை உள்ளடக்கியது. பணிநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்கள் நேர்காணல் வாயிலாகவோ அல்லது சமூக ஊடகப்பதிவுகள் மூலமோ தங்கள் குறைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட், நான்காவது காலாண்டு முடிவுகளின் அறிவிப்பில், நிறுவனத்திற்கு கிடைத்த $76.05 பில்லியன் (7600 கோடி) வருவாயில் சுமார் $13.6 பில்லியன் (கிட்டத்தட்ட 1360 கோடி) லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.