கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டிய அமரிக்க அதிபர்!
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் ஒருவர், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செய்யப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் தனது பிரச்சாரத்தை கூகுள் நிறுவனம் பலவீனப்படுத்த உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் மீது டிரம்ப் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறிய நிலையில், இதுகுறித்து தெரிவித்த கூகுள் நிறுவனம், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.