Categories: உலகம்

இந்திய கண் சொட்டு மருந்தில் கிருமியா? 3 பேர் பலி.. 8 பேருக்கு கண்பார்வை இழப்பு – அமெரிக்கா எச்சரிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண் சொட்டு மருந்தில் அசுத்த தண்ணீர் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை.

சமீப காலமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல், சளி சிரப்புகள் மீது புகார்களை எழுந்து வந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த இருமல் மருந்தால் பலர் உயிரிழந்துள்ளனர் என உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கண் சொட்டு மருந்தில் கிருமி (அசுத்த நீர்) இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கையை விடுத்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கண் சொட்டு மருந்தில் பாக்டீரியா:

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண் சொட்டு மருந்துகளுடன் தொடர்புடைய அதிக மருந்து-எதிர்ப்பு பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு நிறுவனம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸின் உயர்மட்ட சுகாதார நிறுவனமான, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), ஒரு வகை கிருமியான சூடோமோனாஸ் ஏருகினோசாவின் விரிவான மருந்து-எதிர்ப்பு விகாரத்தின் பல மாநில மனிதர்களின் தொற்று பாதிப்பை ஆராய்ந்து வந்தது.

சென்னை நிறுவனம்:

இந்த கிருமி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட EzriCare செயற்கை கண் சொட்டு மருந்துகளில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சொட்டு மருந்தினை அமெரிக்காவில் பயன்படுத்தி, 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேருக்கு கண்பார்வை பறிபோனதாகவும், 12 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. குலோபர் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்து மீது தான் இந்த புகார் கிளம்பி உள்ளது. இது சென்னையை சேர்ந்த நிறுவனமாகும். அசுத்தமான தண்ணீரால் இந்த சொட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது என்று அமெரிக்கா குற்றசாட்டி உள்ளது.

தடை செய்ய வேண்டுகோள்:

சென்னைக்கு தெற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர், பிப்ரவரியில் அமெரிக்க சந்தைக்கான கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்தியது. எனவே, இந்த சொட்டு மருந்தினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தற்போது அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.  முன்னதாக, அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு, எஸ்ரிகேர், எல்எல்சி, டெல்சாம் பார்மா போன்ற நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் செயற்கை கண்ணீர் லூப்ரிகண்ட் சொட்டு மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் பற்றி விசாரணை நடத்தி வந்தது.

அமெரிக்கா எச்சரிக்கை:

இந்திய கண் சொட்டுகளுடன் இணைக்கப்பட்ட அதிக மருந்து எதிர்ப்பு பாக்டீரியா அமெரிக்காவிற்கு பரவக்கூடும் என்று CDC எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, அசுத்தமான செயற்கைக் கண்ணீரைப் பயன்படுத்துவது கண் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது குருட்டுத்தன்மை அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.

சூடோமோனாஸ் ஏருகினோசா என்பது ஒரு பாக்டீரியா ஆகும். இது ரத்தம், நுரையீரல் அல்லது காயங்களில் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும், மேலும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகிவிட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. “EzriCare அல்லது Delsam Pharma-ன் கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியவர்கள், கண் நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

3 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

4 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

7 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

7 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

8 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago