காசாவில் நடந்து வரும் போரால் மாலத்தீவுகளில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பாஸ்போர்ட்டை கொண்டவர்களுக்கு நாட்டு நுழைவைத் தடை செய்வதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.
மாலத்தீவின் அதிபர் அலுவலகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நுழைவைத் தடுக்க சட்ட மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்ததாகவும், இந்த செயல்முறையை கண்காணிக்க ஒரு துணைக்குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது.
அதிபர் முகமது முவிசு பாலஸ்தீன மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய சிறப்பு தூதரை நியமித்து, நிதி திரட்டும் முயற்சியை ஆரம்பிப்பார் எனவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஓரன் மார்மோர்ஸ்டெயின், இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், அங்கு உள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு, மாலத்தீவுக்கு சுமார் 11,000 இஸ்ரேலியர்கள் வந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் 0.6% ஆகும். மாலத்தீவுக்கு இந்த ஆண்டில் முதல் 4 மாதங்களில் வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…