காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால்.. என பயங்கரமான எச்சரிக்கையை ஹமாஸ்க்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொடுத்திருக்கிறார்.

donald trump angry

அமெரிக்கா : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பு சூழலில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஹமாஸ் கைதியாக வைத்திருக்கும் நபர்களை விடுவிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டு இருக்கிறது.

இந்த போரில் கிட்டத்தட்ட 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில், அங்கு பதட்டமான சூழல் தான் நிலவிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் கைதியாக வைத்துள்ள 99 பிணைக் கைதிகளில் 33 பேரை விடுவிக்க வேண்டும், அதே நேரத்தில், இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள 737 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் 19-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் 65க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதன் காரணமாக இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஹமாஸ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இதனால், “மறு அறிவிப்பு வரும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்க முடியாது” என ஹமாஸ் அறிவித்தது.

இந்தச் சூழலில், தான் மிகவும் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ” காசாவில் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை மதியத்துக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும். அதோடு மோசமான நிலை உருவாகும். நரகம் உருவாக்கப்படும்” என காட்டத்துடன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் அவரிடம் ஹமாஸுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப் “நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸ் உணர்ந்து கொள்வார்கள். நீங்களும் அதற்கான உள் அர்த்தத்தை கண்டுபிடிப்பீர்கள்.” எனவும் சிரித்துக்கொண்டே கூறினார். இந்த விஷயத்தில் ட்ரம்ப் கடுமையாக எச்சரிக்கும் வகையில் பேசியிருப்பதன் காரணமாக ஒரு வேலை  இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா காசாவில் போர் செய்யுமா என்கிற பரபரப்பான கேள்விகளும் எழும்ப தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்