உலகின் 4வது பணக்காரராக கவுதம் அதானி; பில் கேட்ஸ்,லாரி பேஜை பின்னுக்கு தள்ளினார் !
உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் கவுதம் அதானி
ஃபோர்ப்ஸ் பட்டியலில், எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார், லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமேசான் முதலாளி ஜெஃப் பெசோஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தற்போது கவுதம் அதானி ஃபோர்ப்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.பில்கேட்ஸ் 20 பில்லியன் டாலர் நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து, ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் 4வது பணக்காரராக கவுதம் அதானி முன்னேறியுள்ளார்.
பில் கேட்ஸ் கடந்த வாரம் தனது முழு செல்வத்தையும் தனது இலாப நோக்கற்ற நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.அதையடுத்து இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி, இப்போது ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கவுதம் அதானி, ‘அதானி குழுமத்தின்’ நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இது இந்தியாவின் முதல் மூன்று கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.இவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் 114 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 க்கு இடையில், அவரது நிகர சொத்து மதிப்பு $ 50 பில்லியனில் இருந்து $ 90 பில்லியனாக வளர்ந்துள்ளது.