மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

எரிவாயு குழாய் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டபோது வானுயர தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

PutraHeight Malaysia Fire

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ் (Petronas) என்ற அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் குழாயில் இன்று (ஏப்ரல் 1) காலை வெடிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் சுமார் 500 மீட்டர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நூறு அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

பாதிப்பு?

இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று செலங்கோர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்த இடம் ஒரு குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ளதால், அருகிலுள்ள கம்புங் கோலா சுங்கை பாரு (Kampung Kuala Sungai Baru) கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்கு தீ பரவியது. இதனால், சில மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு பணி தீவிரம்

தீயை அணைக்கவும், சிக்கியவர்களை மீட்கவும் மலேசிய மீட்புக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பெட்ரோனாஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட குழாயின் வால்வை மூடியதாகவும், தகவலை தெரிவித்துள்ளது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களை செலங்கோர் பேரிடர் மேலாண்மை குழு, புத்ரா ஹைட்ஸ் மசூதியின் பல்நோக்கு மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

மேலும், இன்னும் இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்த சம்பவம், மலேசியாவில் ரமலான்  கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்ததால்,  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Elon musk
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal