காபோன் சதி: தேர்தலை ரத்து செய்து ஆட்சியைக் கைப்பற்றியது கபோனீஸ் இராணுவம்.!

மத்திய ஆப்பிரிக்கா நாடான காபோனில் உள்ள தேசிய தொலைக்காட்சியில் கபோனிஸ் இராணுவ வீரர்கள் சிலர், தற்போதைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை காக்க முடிவு செய்து, தாங்கள் அதிகாரத்தை கைப்பற்றியதாக கூறியுள்ளனர்.
ஜனாதிபதி அலி போங்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை ரத்து செய்வதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அறிவிப்பானது காபோன் 1 பொது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஆனால், ராணுவ வீரர்களின் இந்த அறிவிப்புக்கு அரசு தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் இல்லை. இதற்கிடையில், காபோனில் ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றும் பிரெஞ்சு சுரங்கக் குழுவான எராமெட், பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் அனைத்து வேலைகளையும் நிறுத்தியதாகக் கூறியுள்ளது.
மேலும், 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போங்கோ, கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 64.27 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகிய சிறிது நேரத்திலேயே ராணுவ வீரர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025