ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்கள் முடக்கம் – இஸ்ரேல் பொலிஸ்!

Hamas militants killed

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5-வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், காசாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நிலையில், காசாவிற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, உணவு மற்றும் எரிபொருள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காஸாவில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.

இஸ்ரேல் – காசா இடையே நடைபெற்ற மோதலில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பின் இணையவழி பணபரிமாற்றங்களை முடக்கியுள்ளதாக இஸ்ரேல் பொலிஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, ஹமாஸின் கிரிப்டோகரன்சி தளத்தையும் முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.  சைபர் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து, பைனான்ஸ் கிரிப்டோ பரிமாற்றத்தின் உதவியுடன் இந்த கணக்குகளை கண்டுபிடித்து முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்களின் இந்த நடவடிக்கையால் ஹமாஸின் 90% நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால், எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டன, கைப்பற்றப்பட்ட கிரிப்டோவின் மதிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை பற்றி வெளியிடவில்லை.

மேலும்,  நேற்று இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தகவல் அளித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா மீது நேற்று தொடங்கிய வான்வழி தாக்குதல் 18 மணிநேரமாக தொடர்ந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar