சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று.
இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் , அடுத்த வருடம் 2024இல் மே 10வரையில் இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு விசா தேவையில்லை என அறிவித்தது. இந்த விசா 30 நாட்கள் வரை அளிக்கப்படும் என கூறப்பட்டது.
தாய்லாந்து நாட்டை தொடர்ந்து தற்போது மலேசியாவும் இதனை அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிசம்பர் 1 முதல் 30 நாள் வரையில் சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் விசா இல்லாமல் பயணித்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா நாட்டு சுற்றுலா பயணிகளின் விவரப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 91.6 லட்சம் ஆகும். சீனாவிலிருந்து 4,98,540 மற்றும் இந்தியாவில் இருந்து 2,83,885 பெரும் வந்துள்ளனர். இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட குறைவு ஆகும்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…