இனி இந்த நாடுகளுக்கு செல்ல விசா அனுமதி தேவையில்லை.! எப்போது முதல் தெரியுமா.?

Malaysia VISA

சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று.

இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும்  நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து,  கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் , அடுத்த வருடம் 2024இல் மே 10வரையில் இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு விசா தேவையில்லை என அறிவித்தது. இந்த விசா 30 நாட்கள் வரை அளிக்கப்படும் என கூறப்பட்டது.

தாய்லாந்து நாட்டை தொடர்ந்து தற்போது மலேசியாவும் இதனை அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிசம்பர் 1 முதல் 30 நாள் வரையில் சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் விசா இல்லாமல் பயணித்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா நாட்டு சுற்றுலா பயணிகளின் விவரப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 91.6 லட்சம் ஆகும். சீனாவிலிருந்து 4,98,540 மற்றும் இந்தியாவில் இருந்து 2,83,885 பெரும் வந்துள்ளனர். இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட குறைவு ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்