உலகின் முதல் நாடு…கருக்கலைப்பை உரிமையாக்கிய பிரான்ஸ் நாடாளுமன்றம்.!
France: கருவைக் கலைப்பதற்கு பெண்களுக்கு சட்ட ரீதியாக உரிமை அளித்த முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் வெர்சாய்ஸ் அரண்மனையில் நேற்று (மார்ச் 4, 2024) திங்களன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற கூட்டு அமர்வின் போது, பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்க, அரசமைப்பின் சட்டப் பிரிவு 38-ல் திருத்தம் கொண்டு வரும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
READ MORE – உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! முதலிடம் யாருக்கு தெரியுமா?
அந்த நாடாளுமன்ற கூட்டு அமர்வில், 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, இந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்த மசோதா, சட்ட அங்கீகாரம் பெற்றது. தற்போது, பிரெஞ்சு அரசியலமைப்பில் கருக்கலைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததால், கருக்கலைப்பை பெண்களின் உரிமையாக்கிய முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
READ MORE – அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி..! இந்திய நடனக் கலைஞர் சுட்டுக்கொலை
பெண்கள் கருக்கலைப்பு உரிமையானது அந்தந்த நாட்டின் விதிமுறைகளை பொறுத்து மாறுபடுகிறது. மற்ற நாடுகளில் இதற்கு அனுமதி இல்லை. சொல்லப்போனால, 1975-ல் பிரான்சில் கருக்கலைப்பு உரிமை குற்றமற்றது. இது தொடர்பாக, 2022ல் அமெரிக்காவில் ஒரு வழக்கில் பெண்கள் கருக்கலைப்புக்கு உரிமை கிடையாது என்று தீர்ப்பளித்தது.
READ MORE – காசாவில் போர் நிறுத்தம் தேவை…அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்.!
பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பு கருத்துக் கணிப்புகளின்படி, சுமார் 85% பிரெஞ்சு மக்கள் இதனை ஆதரிப்பதாகக் காட்டுகின்றன. முன்பு இருந்தே அந்நாட்டில் கருக்கலைப்பு குறித்து பெண்கள் ஆதரவாக கோஷமிட்டு வருகிறார்கள். இதற்கு இம்மானுவேல் மாக்ரோனும் ஆதரவு தெரிவித்து வந்தார். இப்பொழுது அதனை பிரெஞ்சு அரசியலமைப்பில் இணைத்ததை தொடர்ந்து அந்நாட்டு பெண்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.