நியூயார்க்: மன்ஹாட்டனின் யூனியன் ஸ்கொயர் பூங்காவில் வீடியோ கேம் கன்சோல்களை வழங்கத் திட்டமிட்டிருந்த நிகழ்வில், பல ஆயிரம் இளைஞர்கள் வருகை தந்ததால் கூட்ட நெரிசலில் வன்முறை வெடித்தது. பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் மூலம் பிரபலமானவர் காய் செனாட் (Mr. Cenat ).
Mr. Cenat இன் யூடியூப் சேனலை 3.6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. எனவே தன்னுடைய ரசிகர்களுக்கு பிளேஸ்டேஷன் 5 கன்சோல்களை வழங்கலாம் என முடிவெடுத்து ஸ்கொயர் பூங்காவில் தான் இதனை வழங்கப்போவதாக இந்த திட்டத்தை சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
இவர் அறிவித்ததையடுத்து, அந்த பூங்காவிற்கு சில மணி நேரங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் தெருக்களில் சலசலப்பு ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த வந்த போலீசாருடன் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறி நின்று கொண்டு கலவரம் செய்தது. கூட்டத்திற்குள்ளே அடிதடி எல்லாம் நடந்தது.
பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தொடங்கி, மாலை 6 மணிக்குத் முடிவடைந்த இந்த நிகழ்வில் கலவரத்தில் ஈடுபட்ட 65 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் மற்றும் கூட்டத்தில் இருந்த சிலருக்கு காயங்கள்மற்றும் உணவு வண்டிகள், போலீஸ் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதம் அடைந்துள்ளதாக அதிகரிக்கள் தெரிவித்தனர். மேலும், யூடியூபர் காய் செனாட் செய்த காரியத்தால் கலவரம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…