இலவச பிளேஸ்டேஷன் அழைப்பால் கூடிய கூட்டம்! பிரபல யூடியூபரால் வெடித்த வன்முறை!

Mr. Cenat

நியூயார்க்: மன்ஹாட்டனின் யூனியன் ஸ்கொயர் பூங்காவில் வீடியோ கேம் கன்சோல்களை வழங்கத் திட்டமிட்டிருந்த நிகழ்வில், பல ஆயிரம் இளைஞர்கள் வருகை தந்ததால் கூட்ட நெரிசலில் வன்முறை வெடித்தது. பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் மூலம் பிரபலமானவர் காய் செனாட் (Mr. Cenat ).

Cenat
Cenat [File Image]

Mr. Cenat இன் யூடியூப் சேனலை 3.6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. எனவே தன்னுடைய ரசிகர்களுக்கு  பிளேஸ்டேஷன் 5 கன்சோல்களை வழங்கலாம் என முடிவெடுத்து ஸ்கொயர் பூங்காவில் தான் இதனை வழங்கப்போவதாக இந்த திட்டத்தை சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இவர் அறிவித்ததையடுத்து, அந்த பூங்காவிற்கு சில மணி நேரங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் தெருக்களில் சலசலப்பு ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த வந்த போலீசாருடன் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறி நின்று கொண்டு கலவரம் செய்தது. கூட்டத்திற்குள்ளே அடிதடி எல்லாம் நடந்தது.

பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தொடங்கி, மாலை 6 மணிக்குத் முடிவடைந்த இந்த நிகழ்வில் கலவரத்தில் ஈடுபட்ட 65 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் மற்றும் கூட்டத்தில் இருந்த சிலருக்கு காயங்கள்மற்றும் உணவு வண்டிகள், போலீஸ் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதம் அடைந்துள்ளதாக அதிகரிக்கள் தெரிவித்தனர். மேலும், யூடியூபர் காய் செனாட் செய்த காரியத்தால் கலவரம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்