ஒரே கட்சியில் இரு அதிபர் வேட்பாளர்கள்.? டிரம்பிற்கு போட்டியாக பென்ஸ்.! பரபரக்கும் அமெரிக்க தேர்தல் களம்.!
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் களமிறங்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவடைய உள்ளது. இதனை அடுத்து 2024 நவம்பரில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது.
தற்போது ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் பங்கேற்க கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தற்போதே அரசியல் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே, குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் வரும் தேர்தலில் போட்டியிட போவதாகவும், அதற்கான கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தற்போது அதேபோல டிரம்ப் அதிபராக இருந்த போது துணை அதிபராக பதவிவகித்த மைக் பென்ஸ்-வும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்துள்ளார். இதனால் டிரம்பிற்கு கடும் போட்டியாக மைக் பென்ஸ் மாறியுள்ளார். அமெரிக்க தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.