விதிகளை மீறிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.? எம்பி பதவி பறிப்பு.!

boris johnson

அரசு விதிகளை மீறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் எம்பி பதவியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான் கொரோனா பரவலும், அதன் கடும் கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தன. அந்த சமயம் தனது இல்லத்தில் பிரமாண்ட பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடினார் போரிஸ் ஜான்சன் என அவர் மீது புகார் எழுந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக நாடாளுமன்ற குழு அவர்மீது குற்றம் சாட்டியது. இதற்கு அவர் தவறான விளக்கங்களை நாடாளுமன்றத்திற்கு  அளித்ததாகவும் போரிஸ் ஜான்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்கிடையில், அவர் பிரதமர்பொறுப்பில் இருந்து விலகி, ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அரசு விதிகளை மீறிய குற்றத்திற்காகவும், நாடாளுமன்றதிற்கு தவறான தகவல்களை அளித்ததாக கூறப்பட்ட புகார் குறித்தும், நாடாளுமன்ற குழுவானது போரிஸ் ஜான்சனை எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பரிந்துரை செய்தது.

இதனை அடுத்து, தனது எம்பி பதவியை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியுள்ளது. ராஜினாமா செய்த பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீது நாடாளுமன்ற குழு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கும் என தான் நினைக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களை கொடுத்ததாக தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு உரிய ஆதாரத்தை குழு வெளியிடவில்லை என்றும் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்