சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார். அவருக்கு வயது 94.

Osamu Suzuki

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி (டிச,25ம் தேதி) அன்று காலமானார் என்று ஜப்பானின் சுசூகி மோட்டார் நிறுவனம் (டிச.27) தெரிவித்துள்ளது.

இவர், எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். ஒசாமு சசுசூகி, மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் இயக்குநராகவும், கௌரவத் தலைவராகவும் இருந்தார். தற்பொழுது, அவரது மறைவுக்கு தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

1930 ஜனவரி 30 ஆம் தேதி ஜப்பானின் ஜெரோவில் பிறந்த ஒசாமு, Chuo பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். ஏப்ரல் 1958 இல், சுசுகி மோட்டார் கம்பெனி லிமிடெட்டில் சேர்ந்தார். பின்னர், அவர் நவம்பர் 1963 இல் இயக்குநராக நியமிக்கப்பட்டார், டிசம்பர் 1967 இல் இயக்குநராகவும் நிர்வாக இயக்குநராகவும் ஆனார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்