ஒரே நாளில் ரூ.5½ செலவு செய்த முன்னாள் பிரதமர் கோர்ட்டில் விசாரணை !
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில் மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து சுமார் 70 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் எழுந்தது. அந்தப் பணத்தில் அவரது மனைவி ஆடம்பர பொருள்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது.
இதனால் அவர் மீது மூன்று நம்பிக்கை மோசடி வழக்குகளும் , ஒரு அதிகார துஷ்பிரயோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து ஒரு ஆடம்பர நகையை வாங்கி கிரெடிட் கார்டு மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 5 1/2 கோடி செலுத்தியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.