இங்கிலாந்துக்கு புதிய உள்துறை அமைச்சர் நியமனம்… முன்னாள் பிரதமருக்கும் அமைச்சர் பொறுப்பு.!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சுயெல்லா பிராவர்மன் இன்று இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை அன்று லண்டன் மாநகரில் நடந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பு பேரணி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து சுயெல்லா பிராவர்மன் அரசின் மேற்பார்வையின்றி அறிக்கை வெளியிட்டார். இந்த நடவடிக்கைபாலத்தீன ஆதரவு நடவடிக்கையாக கருதப்பட்டு பல்வேறு அரசியல் விமர்சனங்களை பெற்றது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்.!
இதனை தொடர்ந்து தான் , சுயெல்லா பிராவர்மன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் என தகவல்கள் கூறப்படுகிறது. பிரதமர் ரிஷி சுனக்கை போலவே, சுயெல்லா பிராவர்மனும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக, ஜேம்ஸ் கிளவர்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இவர் ரிஷி சுனக் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2010 முதல் 2016 வரையில் இங்கிலாந்து பிரதமர் பொறுப்பில் இருந்துள்ளார்.