கனடா முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி காலமானார்..!
Brian Mulroney: கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி தனது 84வது வயதில் காலமானார். அவரது மரணம் குறித்த தகவலைய அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1939- ஆம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி கியூபெக்கில் உள்ள Baie-Comeau நகரில் பிறந்த முல்ரோனி 1984-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 தேதி கனடாவின் பிரதமராக பதவியேற்றார்.
READ MORE- வங்கதேச தீ விபத்து.! சமையல் எரிவாயுவால் 7 மாடிகளுக்கு பரவிய தீ.! 44 பேர் உயிரிழப்பு.!
பின்னர் ஜூன் 25, 1993 இல் பதவி விலகினார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கனடாவின் பிரதமராக இருந்தார். மல்ரோனி நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி தீவிர போராட்டம் நடத்தியவர், அதற்காக அவருக்கு நெல்சன் மண்டேலா நன்றி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1985ஆம் ஆண்டு நடந்த “கனிஷ்கா குண்டுவெடிப்பு” போது பிரதமராக பிரையன் முல்ரோனி இருந்தார். 1985-ஆம் ஆண்டு கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 329 பேரும் உயிரிழந்தனர்.
READ MORE- பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் கடன் வழங்கிய சீனா!
பயணிகள் சூட்கேஸில் வெடிகுண்டு இருந்ததன் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தை காலிஸ்தானி தீவிரவாதிகள் செய்ததாக கூறப்படுகிறது.