முன்னாள் போப், 95 வயதில் காலமானார்..!

Default Image

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட், தனது 95வது வயதில் காலமானார்.

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட், ஜோசப் ராட்ஸிங்கர், தனது 95 வயதில் வாடிகன் இல்லத்தில் காலமானார். ஜெர்மனியில் பிறந்த இவர், கடந்த 1000 ஆண்டுகளில் போப் பதவி வகிக்கும் முதல் ஜெர்மன். மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265 வது தலைவரான இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

அவர் 8 ஆண்டுகளுக்கும் குறைவாக கத்தோலிக்க திருச்சபைக்கு தலைமை ஏற்று வழிநடத்தினார், மேலும் 1415 இல் 12-ம் கிரிகோரி க்குப் பிறகு, போப் பதவியை ராஜினாமா செய்த முதல் போப் ஜோசப் ராட்ஸிங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்