இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Imran khan

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான இம்ரான் கான், தற்போது ஊழல் புகாரில் சிக்கி கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 14 ஆண்டு சிறைத்தண்டனையை அவர் பெற்றுள்ளார். அவர் மீதான குற்றசாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்டுள்ளன என PTI கட்சியினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இப்படியான சூழலில் தான், இம்ரான் கான் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பாகிஸ்தான் உலக கூட்டணி எனும் PWA அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிவிப்பானது கடந்த மார்ச் 28 அன்று பாகிஸ்தான் உலக கூட்டணி (Pakistan World Alliance – PWA) உறுப்பினர்களால் வெளியிடப்பட்டது. இவர்கள் நார்வேயின் அரசியல் கட்சியான பார்ட்டியெட் சென்ட்ரம் (Partiet Sentrum) உடன் இணைந்து செயல்படுகின்றனர்.

இம்ரான் கான், பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதில், “பார்ட்டியெட் சென்ட்ரம் சார்பாக, பரிந்துரை செய்யும் உரிமை பெற்ற ஒருவருடன் இணைந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு, தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்தியதற்காக, குறிப்பாக பாகிஸ்தான்-இந்திய உறவுகளை சீர்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படை விமானியான அபிநந்தனை விடுவித்த சம்பவத்திற்காகவும் அவர் பரிந்துரைக்கப்பட்டார். அப்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், நார்வே நோபல் கமிட்டி மேற்கண்டவாறு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை பெறுகிறது. பரிந்துரை செய்யும் நபர்களை பல்கலைக்கழக பேராசிரியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பரிசு பெற்றவர்கள் போன்றோர் முன்மொழியலாம். பரிந்துரைகள் பெறப்பட்ட பிறகு, 8 மாத கால செயல்முறைக்கு பிறகு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்