சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்!
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) தலைவரான அவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். 68 வயதாகும் அவர், கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து விடுமுறையை கொண்டாட ஷாங்காய் சென்றிருந்தபோது திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. தற்போது, அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லீ கெகியாங்-க்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார் என்றும் அந்நாட்டு பிரபல ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லீ தனது அவரது பதவிக் காலத்தில், வேலைகள் மற்றும் செல்வத்தை உருவாக்கும் தொழில்முனைவோருக்கு நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்கி வந்தார். அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹெஃபியில் பிறந்த இவர் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.!
லீ கெகியாங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவின் பொருளாதாரத்தில் உருமாற்ற சீர்திருத்தத்தை கொண்டு வந்த தலைவரான டெங் சியாபிங்கின் சிலைக்கு மாலை அணிவித்து, சீனா அணைத்து தடைகளையும் தண்டி பொருளாதாரம் நிறுத்தப்படாது. மஞ்சள் நதி என்றும் பின்னோக்கிப் பாயாது என்று கூறியிருந்தார்.