தனது மகனிடமே கொள்ளையடிக்க முயன்ற தந்தை..! திகைப்பூட்டும் சம்பவம்..!
டெல்லியில் தனது மகனிடமே கொள்ளையடிக்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகனிடம் கொள்ளை :
ஸ்காட்லாந்தில் தந்தை ஒருவர் தனது மகனிடமே கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவின் கிரான்ஹில் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் 17 வயது சிறுவன், தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றுள்ளான். சிறுவன் பணத்தை எடுத்த பிறகு தனது இடதுபுறம் ஏதோ இருப்பது போல நினைத்து திரும்பி பார்த்தபொழுது முகமூடி அணிந்த நபர் ஒருவர் சிறுவனின் முதுகில் கத்தியை வைத்து பணம் கேட்டுள்ளார்.
தந்தையை கண்டுகொண்ட சிறுவன்:
முகமூடி அணிந்த நபரின் குரலை அடையாளம் கண்டுபிடித்த சிறுவன், அது தனது தந்தை அறிந்ததும் அதிர்ந்து போனான். பின்னர் சிறுவன் நான் யார் என்று தெரியுமா? என கேட்டதற்கு முகமூடி அணிந்த தந்தை அதனை பொருட்படுத்தாமல் சிறுவனிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். சிறுவன் தனது முகத்தில் அணிந்திருந்த முகக்கவசத்தை (snood) கீழே இறக்கி நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். தனது மகனை கண்டதும் திகைத்து போய் என்னை மன்னிக்கவும் என்று கூறியுள்ளார்.
சிறை தண்டனை:
பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பிச்சென்று நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். விசாரணையில் தனது மகனிடம் கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். அவருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.