ஹவாய் காட்டுத் தீயால் சாம்பலான பகுதி: பலி எண்ணிக்கை 89ஆக உயர்வு!
ஹவாய் காட்டுத் தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் ஒரு பகுதியான ஹவாய் தீவுகள் பசிபிக் கடலின் நடுவில் அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்த தீவுகளில் ஏற்பட்ட தீயில் கருகியும், கடலில் குதித்தும் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்றுவரை இறப்பு எண்ணிக்கை 89 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது அமெரிக்க வரலாற்றில் 100 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ உயிரிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
ஆகஸ்ட் 8 இரவு எரிய தொடங்கிய இந்த காட்டு தீ, இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. வீடுகள், கார்கள் என அனைத்தும் இந்த காட்டுத் தீயில் எரிந்து கூடுகளாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.