ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

Top 10 richest

Forbes : அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes)  ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது 2024ம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

அதில், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், லாரி எலிசன், வாரன் பஃபெட், பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர், லாரி பேஜ், முகேஷ் அம்பானி ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். இவர்களின் நிகர மதிப்பு பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

எனவே, ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில், ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து மதிப்பு 235.6 பில்லியன் (net worth of $235.6) டாலராகும்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 192.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தையும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 188.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்தையும் பிடித்தார். இதுபோன்று, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 169.8 பில்லியன் டாலருடன் 4வது இடத்திலும், ஆரக்கிளின் லாரி எலிசன் 154.6 பில்லியன் டாலருடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

Read More – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.!

பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட் 135.0 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6 இடத்திலும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 129.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7வது இடத்திலும், அதேபோல் மைக்ரோசாப்ட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் 123.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்திலும் உள்ளனர்.

கூகுளின் இணை நிறுவனரான லாரி பேஜ் 118.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 113.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளார்.

Read More – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!

இதில் குறிப்பாக முதல் இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும், 10வது இடத்தில் இந்தியாவை சேர்த்தவரும் இருக்கும் நிலையில் மற்ற 8 இடங்களை அமெரிக்காவை சேர்ந்தவர்களே இடம்பிடித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை தொடர்ந்து 2024ம் ஆண்டுக்கான இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதே ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். கவுதம் அம்பானி, ஷிவ் நாடார், சாவித்ரி ஜிண்டால் & குடும்பம், திலீப் ஷங்வி, சைரஸ் பூனவல்லா, குமார் பிர்லா, குஷால் பால் சிங், ராதாகிஷன் தமானி, லட்சுமி மிட்டல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்