ரஷ்யாவின் ஷாப்பிங் மாலில், கால்பந்து அளவு மிகப்பெரிய தீவிபத்து.!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப்பகுதியில் உள்ள பெரிய ஷாப்பிங் மாலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டு பரவியுள்ளது. மெகா 7000ச.மீ பரப்பளவுள்ள கிம்கி ஷாப்பிங் சென்டரில் பற்றிக்கொண்ட தீ, பரவி பெரிய கால்பந்து மைதானம் அளவுக்கு தீ பெரிதாகி மால் முழுவதும் பெருகியது.
தீயணைப்பு படைகள் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர் என்று என்று ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எளிதில் தீ பற்றக்கூடிய பெயிண்ட், வார்னிஸ் போன்ற பொருள்கள் உள்ள பகுதிகளில் தீப்பற்றியிருக்கலாம் என்றும் அது மேலும் மால் முழுவது பரவியிருக்கலாம் என்றும் கூறப்டுகிறது.
தீ விபத்தின் போது மக்கள் ஷாப்பிங் கட்டிடத்திற்குள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தாலும், உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. மாலில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.
In Moscow, the Mega Khimik shopping center is on fire. First, the roof caught fire. The area of the fire is about 7000 m², it has already been assigned 4 (out of five) difficulty level. ???? pic.twitter.com/o1nqMrYQlW
— Dmytro Report ???? (@thedimsol) December 9, 2022