Categories: உலகம்

பிரிட்ஜில் கால், சூப்பில் விரல்கள்..! ஹாங்காங் மாடல் அழகி கொடூர கொலை..!

Published by
செந்தில்குமார்

காணாமல் போன ஹாங்காங் மாடல் அழகியின் உடல் உறுப்புகள் குளிர்சாதன பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் மாடல் அழகி அபி சோய்-இன் உடல் உறுப்புகள் அவரது முன்னாள் மாமியார் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 28 வயதான அபி சோய் ஹாங்காங்கின் பேஷன் காட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். சமீபத்தில் எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 ஹாட் கோச்சர் நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் புகைப்படம் எடுக்கப்பட்டார். இதையடுத்து அழகி அபி சோய் காணாமல் போனதாக கடந்த இரண்டு தினங்களாக தேடப்பட்டு வந்தார்.

Abby Choi

பின்னர் காவல் துறையினரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில் அபி சோய்யை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். தேடலில் ஒரு பகுதியாக லுங் மெய் என்ற கடற்கரை கிராமத்தில் உள்ள சோயின் முன்னாள் மாமியார் வாடகைக்கு இருந்த வீட்டை சோதனை செய்ததில் குளிர்சாதனப் பெட்டியில் அவரது இரு கால்களை கண்டுபிடித்தனர். மேலும் சோதனை செய்த போலீசார் வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பில் (சூப் பானை) கை விரல்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ஆலன் சுங், “பாதிக்கப்பட்டவரை தேடும் முயற்சியில் அவரது உடல் பாகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை, கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற பொருட்களும் அவர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது தலை இன்னும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

இது தொடர்பாக அவரது மாமியார் உட்பட மூன்று பேரை கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், சோயின் முன்னாள் கணவரை இன்னும் தேடி வருவதாகவும் மேலும் கூறினார். இந்த சம்பவம் ஹாங்காங் முழுவதும் பதற்றத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago