2026-க்குள் உருவாக போகும் பறக்கும் டாக்சிகள்..! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர்
துபாயில் 2026-க்குள் பறக்கும் டாக்சிகள் இயங்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யுஏஇ) துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், 2026ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளார். ஷேக் முகமது, துபாயில் பறக்கும் டாக்ஸி தளவாடங்களின் (வெர்டிபோர்ட்) வடிவமைப்பிற்கும் ஆரம்பகட்ட திட்டமாக தளவாடங்கள் (வெர்டிபோர்ட்) அமைப்பதற்கான இருப்பிடத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று, துபாயில் பறக்கும் டாக்ஸி வெர்டிபோர்ட்களின் வடிவமைப்புகளுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம், இது மூன்று ஆண்டுகளுக்குள் செயல்படும்” என்று ட்வீட் செய்துள்ளார். உலக அரசு உச்சிமாநாடு 2023 இல் ஆர்டிஎ (RTA) ஸ்டாண்டில் இந்த வடிவமைப்பின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் டாக்ஸி அதிகபட்சமாக மணிக்கு 300 கிலோமீட்டர் வேகம் கொண்டது மற்றும் 241 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும். இந்த பறக்கும் டாக்சிகள் புகை போன்ற மாசுபடுத்தும் வாயுக்களை வெளியிடாது மற்றும் விமானி உட்பட 5 பேர் பயணம் செய்ய முடியும்.
من القمة العالمية للحكومات .. اعتمدنا اليوم تصميم محطات التاكسي الجوي الجديدة في دبي .. والتي ستبدأ عملها خلال ٣ سنوات .. pic.twitter.com/tGQyPFVDUD
— HH Sheikh Mohammed (@HHShkMohd) February 12, 2023