வங்கதேசத்தில் ஜெஸ்ஸோர் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பெனபோலே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. குறைந்தது நான்கு பெட்டிகளாவது தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர்.
அது மட்டுமின்றி தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைனைக்கும் பணிகளில் ஈடுபட்டு பயணிகளை மீட்டனர்.
இந்தோனேசியாவில் ரயில் விபத்து! 3 பேர் பலி…28 பேர் காயம்!
இந்த தீ விபத்து சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அதிகாரிகள் பேசியதாவது ” இந்தியாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், மேலும் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கோபிபாக் பகுதியை அடைந்தபோது ரயில் தீ விபத்து ஏற்பட்டது.
எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதை ரயில்வே அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முதலில் சம்பவ இடத்திற்கு வந்து, தீயினால் காயமடைந்த பலரை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு மற்றும் வேறு சில வசதிகளுக்கு அனுப்பி வைத்தனர்” எனவும் தெரிவித்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…