பசிபிக் பெருங்கடலில் இரண்டு வாரங்களாக காணாமல் போன மீனவர் உயிருடன் மீட்பு!

Pacific Ocean

ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போனதாக கூறப்படும் மீனவர் ஒருவர், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில், லைஃப் படகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 12 ஆம் தேதி மாலை வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கிரே துறைமுகத்தில் இருந்து 43 அடி உயர கப்பலில், ஒரு குழு வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றுள்ளது. அப்போது, திடீரென ஒரு மீனவர் காணமால் போனதாகவும், காணாமல் போன அந்த நபரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஏறக்குறைய இரண்டு கழித்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து ஒரு லைஃப் படகில் உயிருடன் மிதந்தபடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடலோர காவல்படை, காணாமல் போனவரை 10 நாட்கள் கடந்தும் தேடிய நிலையில், தேடுதுலை இடைநிறுத்திய ஒரு நாள் கழித்து, அவரைக் கனேடிய மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழு அவரை மீட்கப்பட்ட பின், அவர் 13 நாட்களாக படகில் தனியாக இருந்ததாகவும், உணவு தீர்ந்து போனதால் சால்மன் மீன் ஒன்றை சாப்பிட்டு பசியை தீர்த்ததாகவும் தெரிய வந்துள்ளது.

காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம் – WHO தலைவர்!

உயிருடன் மீட்கப்பட்ட அந்த நபர், இப்பொது நல்ல நிலைமையில் இருப்பதாகவும், அவர் கனேடிய கடலோர காவல்படை மற்றும் மற்றொரு கனேடிய மீட்பு நிறுவனம் மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த நபர் மேல் சிகிச்சைக்காக பிரிட்டிஷ் கொலம்பியாவின் டோஃபினோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஹமாஸ் விமானப்படை தளபதி உயிரிழந்தார்.! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.! 

தற்போது, மீட்கப்பட்ட நபருடன் காணாமல் போன மற்றொரு மீனவரை கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. அவரை தேடும் பணி மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார்களா என்பது குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்