போருக்கு பின் முதல் வெளிநாட்டுப்பயணம்! அமெரிக்கா செல்கிறார் ஜெலென்ஸ்கி.!
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போருக்குப்பிறகு முதன்முறையாக வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக தகவல்.
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி 2022 தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவால், உக்ரைனின் சில பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் மின்சாரமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போருக்குப்பிறகு முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 20பில்லியன் டாலர் மதிப்பிலான பல ராணுவ உதவிகளை, அமெரிக்கா செய்து வருகிறது.
ஜெலென்ஸ்கி வாஷிங்டன் சென்று அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் நிலைமை பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.